fbpx

பொங்கல் பரிசு 2000 ரூபாய்.! தமிழக அரசின் திட்டம் என்ன.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.!

தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். தைத்திங்கள் 1-ஆம் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்று தமிழர்கள் அனைவரும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடுவர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசே ரேஷன் கடை மூலமாக தமிழர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருவதால் பொங்கல் பரிசு தொடர்பான சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக வீட்டு வசதி துறை அமைச்சர் திரு முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் கலைஞர் காப்பீட்டு மருத்துவத் திட்டத்தில் வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுமா அல்லது ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்பது குறித்து அரசு அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் விரைவிலேயே மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு…! 3 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்"…!

Sun Dec 3 , 2023
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். பொதுவாக ரெட் அலெர்ட் என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவது.மழை பொழிவை பொறுத்தவரை 12 செ.மீ முதல் 25 செ.மீ க்குள்ளாக மழை இருந்தால் அது ஆரஞ்சு […]

You May Like