தமன்னா நடனத்துடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா பாடலின் ப்ரொமோ வீடியோ கடந்த ஜூன் 03ஆம் தேதி வெளியானது.
தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்து இணையத்தை வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தாலும், நடிகை தமன்னாவின் நடன அசைவுகள் ரஜினிகாந்தைத் தாண்டி ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.
இந்நிலையில், காவாலா பாடலுக்கு நடனமாடி நடிகை தமன்னா தற்போது வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தமன்னா பகிர்ந்துள்ள இந்த வீடியோ தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தி லைக்ஸ் அள்ளி வருகிறது.