fbpx

நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) புயலாக உருவாகி, பிறகு டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடனுக்கும் எனவும், இந்த புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை உட்பட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிக்கை வெளியாகின. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) நடைபெறவிருந்த இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், புயல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

மறக்கமுடியுமா?… அதே டிசம்பர் மாதம்!… 2004 வார்னிங் கொடுத்த நிலநடுக்கம்!… பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கை!

Sun Dec 3 , 2023
பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மிண்டானோவோ தீவில் கடற்பகுதியின் மையத்தின் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களும், வீடுகளும் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை […]

You May Like