fbpx

”கர்ப்பிணிகளே முன்கூட்டியே மருத்துவமனையில் அட்மிட் ஆகுங்க”..!! ”தாமதிக்காதீங்க”..!! மருத்துவத்துறை அவசர அறிவிப்பு..!!

பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* குறுகிய காலத்தில் பிரசவ தேதியை எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் முன்கூட்டியே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

* தகுந்த மருந்து மாத்திரைகள், பாம்பு கடி விஷமுறிசு ஊசி மற்று ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

* மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால், சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தற்போது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தகுந்த மருந்துவ நிவாரண முகாம்கள், தேவைப்படின் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108-ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More : ஃபெஞ்சல் புயல்..!! நீரில் நனைந்த ஃபேன், லைட்..!! மின்சாரம் வந்ததும் இந்த தவறை செய்யாதீங்க..!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்..!!

English Summary

The Department of Health and Human Services has issued an important announcement regarding precautionary measures for Cyclone Penjal.

Chella

Next Post

கனமழை முதல் மிக கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Sat Nov 30 , 2024
A red alert has been issued for some districts of Tamil Nadu today and tomorrow in response to Cyclone Fenchal, which has formed in the Bay of Bengal.

You May Like