பாலிவுட் நடிகைகளில் முன்னாடி நடிகையாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் உயிரே திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பிரீத்தி ஜிந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்து அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். தற்போது தனது பிசினஸ் மற்றும் குடும்பம் என வாழ்ந்து வருகிறார் பிரீத்தி ஜிந்தா. இந்நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையில் நடந்த இரண்டு விசித்திரமான அனுபவங்கள் என இரண்டு சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார் அவர். அந்தப் பதிவில் இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் என்னை ஒரு அம்மாவாக கலங்கச் செய்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். முதல் சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா தனது மகள் ஜீயாவை பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ப்ரீத்தி. சரி என்று விலகிச் சென்ற அந்தப் பெண் திடீரென வந்து அவரது கையில் இருந்த குழந்தையை பறித்து அதன் கன்னத்தில் முத்தமிட்டு மிகவும் அழகான குழந்தை என்று திருப்பி கையில் கொடுத்து விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்தப் பெண்மணி என் குழந்தைகள் விளையாடும் அதே தோட்டத்தில் தான் என் குழந்தைகளும் விளையாடி இருப்பார்கள் நான் நடிகையாக இல்லாமல் சாதாரணமான மனிதராக இருந்திருந்தால் என்று தெரிவித்திருக்கிறார்..
மேலும் சர்க்கரை நாற்காலியில் இருக்கும் ஒரு மனிதன் புகைப்படத்தை போட்டு பகிர்ந்திருக்கும் பிரீத்தி இந்த மனிதன் கடந்த சில நாட்களாக எங்கு சென்றாலும் தங்களை பின்தொடர்ந்து வருவதாகவும் அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை வந்தபோது காசு கொடுத்தேன் ஆனால் இந்த முறை என்னிடம் கிரெடிட் கார்டு மட்டும் தான் இருந்தது அதனால் காசு இல்லை என்று சொல்லிவிட்டேன் ஆயினும் அந்த மனிதன் அந்த இடத்தை விட்டு நகராமல் வலுக்கட்டாயமாக காசு கேட்டுக் கொண்டே இருந்தார். இது எந்த மாதிரியான ஒரு நடவடிக்கை என எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் . மேலும் இது பற்றி பேசி இருக்கும் ப்ரீத்தி இந்த சம்பவங்களை அருகில் இருந்த புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆனால் அவரும் எங்களுக்கு உதவும் முன்வரவில்லை இது எந்த மாதிரியான உலகமாக இருக்கிறது என பதிவிட்டு இருக்கிறார்.