வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தின் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.. மேலும் ரணில் விக்ரம சிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது..
எனவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை மீறி அதிபர் மாளிகைக்குள் முற்றுகையிட முயன்றனர்.. இதையடுத்து நிலையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.. மேலும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.. இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்.. கொழும்புவில் உள்ள மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கோட்டபய ராஜபக்ச தப்பியோடியதாக கூறப்படுகிறது.. தற்போது கோட்டபய ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை..
இதனிடையே தற்போது தலைமை செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.. மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இலங்கையில் நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை வைத்தார்….
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணை சூழல் பற்றி அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது.. பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. மேலும் அனைத்துக்கட்சிகள் அடங்கிய புதிய அரசு அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..
மேலும் 16 எம்.பிக்கள் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.. மேலும் முதிர்ந்த தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தங்கள் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்..