fbpx

28-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி… 2 நாள் பயணத்திட்டம் வெளியீடு..

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது..

சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஜூலை 28-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்..

இந்நிலையில் பிரதமர் மோடியின் சென்னை பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.. வரும் 28-ம் தேதி மதியம் 2.20-க்கு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து விமானப்படை விமானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.. பின்னர் அங்கிருக்கும் ஓய்வறையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாறில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்..

அங்கிருந்து சாலை வழியாக நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்லும் மோடி, மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை தொடங்கி வைக்கிறார்.. பின்னர் இரவு 7.35 மணிக்கு காரில் பயணம் மேற்கொண்டு, 7.50க்கு மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.. அன்றிரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 9.55-க்கு புறப்பட்டு சாலை வழியாக காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்..

42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு காலை 11.35 மணிக்கு காரில் புறப்பட்டு 11.50-க்கு சென்னை விமான நிலையம் செல்கிறார்.. 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் புறப்படும் மோடி, மதியம் 2.15 மணிக்கு குஜராத் திரும்புகிறார்..

Maha

Next Post

மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்..!!

Tue Jul 26 , 2022
மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுகவினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் […]

You May Like