fbpx

தமிழகம் வரும் பிரதமர் மோடி… தேர்தல் ஆணையம் செல்லும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…!

பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 30,31, ஜூன்1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் இன்று கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

நடிகர் பகத் ஃபாசிலுக்கு ஏற்பட்டுள்ள டிஸ்ஸார்டர் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்னென்ன?

Wed May 29 , 2024
தனக்கு அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) இருப்பதாக மலையாள நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். இது கவனக்குறைவு சீர்குலைவு என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த பிரச்னை குழந்தைகளிடம் மட்டுமே காணப்படும். ஆனால் கேரளாவில் குழந்தைகள் இல்லம் ஒன்றில் […]

You May Like