fbpx

’அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள்’…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதிக்கு விதிக்கப்படும். மேலும், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கு மேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதிகளும் இந்த கட்டுப்பாடுகளுக்குள் விதிக்கப்படும்.

image
ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது ஏற்படக்கூடிய தொற்றினால் 95 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 5 சதவீதம் பேர் மட்டும்தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 61 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 95.23 சதவீதமும், இரண்டாவது தவணை 87.25 சதவீதமாகும். 1 கோடியே 6 லட்சம் பேர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை.
image
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அமரர் ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியாக 1300-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

கேசினோ, ஆன்லைன் கேமிங் மீதான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 28% ஆக உயர்த்தப்படுமா? இன்று முக்கிய முடிவு...

Tue Jul 12 , 2022
கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி வரம்பு குறித்து முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டம் இன்று நடைபெற உள்ளது…. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47வது ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த மாதம் சில சரக்குகள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை மாற்றியமைக்க முடிவு செய்தது, இதில் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. […]

You May Like