fbpx

தூக்கில் தொங்கிய தனியார் பள்ளி ஆசிரியை..!! காதல் தோல்வியால் விபரீத முடிவு..!! அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் வஸ்மிதா (21). ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து விட்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வஸ்மிதா, வீட்டின் அறையை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த முருகன், கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வஸ்மிதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நிரவி காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். ச்முதற்கட்ட விசாரணையில், வஸ்மிதாவும் காரைக்கால் புதிய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 5 ஆண்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபருக்கு, “இனிமேல், என்னால் உங்களுக்கு தொல்லைகள் வராது” என மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

அஜித் போடும் மாஸ்டர் பிளான்.. AK 62 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா..? செம அப்டேட்..

Mon Jan 30 , 2023
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் […]

You May Like