fbpx

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது!… உச்சநீதிமன்றம்!

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

போதைப்பொருள் 3 ஆண்டுகளுக்கு முன் ரபி பிரகாஷ் என்பவரை கைது செய்து கோராபுட் மாவட்டம், செமிலிகுடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ரவி பிரகாஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985-ன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ரபி பிரகாஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்கியது. நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தது

மேலும், NDPS சட்டத்தின் பிரிவு 37 ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை வைக்கிறது. அதன் படி, அத்தகைய விடுதலைக்கான விண்ணப்பத்தை எதிர்க்க அரசு வழக்கறிஞருக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல என்பதையும், ஜாமீனில் இருக்கும் போது அவர் எந்தக் குற்றத்தையும் செய்ய மாட்டார் என்பதையும் திருப்திப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி, பலூன் விடும் போராட்டம்...! அண்ணாமலை அதிரடி...!

Mon Jul 17 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த எதிர்க்கட்சி கூட்டம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு தனிநபருக்கு எதிராக உருவாகும் கூட்டணி சில மாதங்களுக்கு மேல் நீடிக்காது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு […]

You May Like