பொதுவாகவே, கீரைகள் சாப்பிடுவதால் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படும். இதனால் எந்த மருத்துவராக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிட பரிந்துரைப்பது உண்டு. அந்த வகையில், தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைந்து, பலர் தங்களின் உணவு முறையை மாற்றியுள்ளனர். இதனால் பலர் கீரைகளை அதிகம் சாப்பிட தொடங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, முருங்கைக் கீரையை பலரும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்நிலையில், முருங்கைக் கீரையை உருவி, ஆய்ந்து எடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் முருங்கை கீரையை அலசினால், நீர் அதில் ஒட்டாது. ஆம், நீங்கள் என்ன தான் முருங்கைக் கீரையை தண்ணீரில் அழுத்தினாலும் அதன் இலைகளில் தண்ணீர் ஒட்டியிருக்காது.
இதனால் பலர், முருங்கைக் கீரையை சரியாக கழுவாமல் சமைத்து விடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு, ஏனென்றால் முருங்கைக் கீரையில் பூச்சிகள், சிறிய புழுக்கள் கூட அதிகம் இருக்கும். இதனால், முருங்கைக் கீரையை கட்டாயம் நன்கு கழுவ வேண்டும். இதற்கு நீங்கள், முருங்கைக் கீரையை உருவி, ஆய்ந்து எடுத்த பிறகு, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரை ஊற்றி விடுங்கள்.
இப்பொது, அந்த தண்ணீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இப்போது முருங்கைக் கீரையின் எல்லா பக்கமும் தண்ணீர் நனைந்து இருக்கும். இப்போது அந்த தண்ணீரை ஊற்றி விட்டு, மீண்டும் ஒருமுறை முருங்கைக் கீரையை வழக்கம் போல சாதாரணமாக தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். இதனால் கீரையில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.
Read more: உங்க பழைய பாத்ரூமை செலவே இல்லாமல், புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ கொஞ்சோ புளி இருந்தா போதும்..