நடிகர் சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவர்களின் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்..
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மொத்தம் பிரபு, ராம்குமார், சாந்தி, ராஜ்வி என்ற 4 பிள்ளைகள் உள்ளனர்.. இவர்களில் நடிகர் பிரபு ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து, தற்போதும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அவரின் சகோதரர் ராம்குமார் ஐ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்..
இந்நிலையில் சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு, ராம் குமார் விற்றுவிட்டதாக சாந்தி, ராஜ்வி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. மேலும் சில சொத்துகளை மகன்களின் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.. ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து பிரபு, ராம்குமார் ஏமாற்றிவிட்டதாகவும் அந்த மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்..
எனவே நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.. நடிகர் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் மகன்கள், மகள்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..