fbpx

’இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்’..! தமிழக அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட இருக்கும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது பொதுமக்களும் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழக அரசால் நடத்தப்படும் எந்த பொதுவிழா, கொண்டாட்டங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட இருக்கும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது பொதுமக்களும் பங்கேற்கலாம் என தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

’இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்’..! தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி சாலையில் போலீஸ் அணிவகுப்பும் மற்றும் கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது ஆண்டாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்ற உள்ளார். பொதுமக்களை அனுமதித்த போதும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும்.. புதிய கோரிக்கை

Wed Aug 3 , 2022
அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.. அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதிகள் அறிவுறித்தினர்… மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்குகளை 2 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் […]

You May Like