fbpx

Holiday: தொடங்கிய தேர்தல் திருவிழா…! தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…! விரைவில் அறிவிப்பு…!

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.

96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Vignesh

Next Post

தீவிர சிகிச்சை பெற்று வரும் லொள்ளு சபா சேஷு.! மருத்துவ செலவிற்கு உதவி கேட்டு இயக்குனர் உருக்கம்.!

Sun Mar 17 , 2024
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு. சின்ன திரையை தொடர்ந்து சினிமாவிலும் பல படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். எனினும் இவர் தனது சின்னத்திரை நிகழ்ச்சியின் பெயராலேயே லொள்ளு சபா சேஷு என அழைக்கப்பட்டு வருகிறார். வெள்ளித் துறையிலும் டிக்கிலோனா, ஏ1, நாய்சேகர் ரிட்டன்ஸ், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தவர். ஏ1 திரைப்படத்தில் இவர் பேசிய  “அச்சசோ […]

You May Like