புனேவில் புதிதாக ஐந்து பேருக்கு குய்லின்-பார் நோய்க்குறி வழக்குகள் கண்டறியப்பட்டன, இது மகாராஷ்டிராவில் சந்தேகிக்கப்படும் அரிய நரம்பு கோளாறுகளின் எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தியுள்ளது. மாநிலத்தில் இந்த நோயால் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்தனர்.
அவர் கூறுகையில், “திங்கட்கிழமை புதிதாக ஐந்து வழக்குகள் கண்டறியப்பட்டன, இருப்பினும் எந்த மரணமும் பதிவாகவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட GBS வழக்குகளின் எண்ணிக்கை 127 ஆகும். புனே நகரத்தைச் சேர்ந்த 32, புனே மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 86, பிம்ப்ரி சின்ச்வாட்டில் 18, புனே கிராமப்புறத்தைச் சேர்ந்த 19 மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் என மொத்தம் 163 பேருக்கு அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
163 நோயாளிகளில், 47 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 47 பேர் ஐசியுவிலும், 21 பேர் வென்டிலேட்டர் ஆதரவிலும் உள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். புனே நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 168 நீர் மாதிரிகள் பொது சுகாதார ஆய்வகத்திற்கு வேதியியல் மற்றும் உயிரியல் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டன, மேலும் எட்டு நீர் ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குய்லின்-பார் நோய்க்குறி என்றால் என்ன? Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்கக்கூடிய திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு அரிய நரம்பியல் நிலை நோயாகும் . குய்லின் பாரே நோய்க்குறி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த நோய் திடீரென உருவாகும். பக்கவாதம் போல் உடலின் இருபக்கங்களையும் முடக்கி, புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதன் அறிகுறிகள் பின்வருமாறு..
தசைகள் பலவீனமடைவது,
உடலெங்கும் வலி,
முதுகில் அடிக்கடி வலி உணர்வு,
மூட்டுப் பகுதிகளில் கூச்சத்துடன் கூடிய வலி,
கைகள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு,
சுவாசப் பிரச்சனைகள்,
மூச்சுத் திணறல்,
Read more : பாலியல் ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை.. சிவப்பு அரிசியில் இத்தனை நன்மைகளா..!