fbpx

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மேலும் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிர்ச்சியான காற்று ஈர்க்கப்படுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 9ஆம் தேதியன்று தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி ரிப்போர்ட்...! 2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளது...! தேசிய நில அதிர்வு மையம் தகவல்...!

Thu Dec 7 , 2023
2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வட இந்தியாவிலும் நேபாளத்திலும் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பாண்டிலும் டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளபடி இந்த பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப நிகழ்வுகளின் விவரங்கள் பற்றி பார்க்கலாம். 2020-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 42. 4.0 […]

You May Like