தாம்பரத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால், கலைந்து ஓடிய தொண்டர்களை நிர்வாகி ஒருவர் மீண்டும் அழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திமுக அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தின் போது அங்கே மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கலைந்து ஓடினார்கள். தொடர்ந்து அங்கிருந்த கடைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதை கண்ட பாஜக நிர்வாகி ஒருவர் இந்த சாதாரண மழைக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சக் கூடாது. பாஜக ஒரு கட்டுப்பாடான கட்சி. என்று கூறி அனைவரையும் அழைத்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் குடையுடன் வந்து மழையில் நனைந்தபடியே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.