fbpx

வரும் 12-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்…! வானிலை மையம் எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ வரும் 12-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல்‌ 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. ஒருசில இடங்களில்‌ இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. அதிக வெப்பநிலை மற்றும்‌ அதிக ஈரப்பதம்‌ இருக்கும்‌ பொழுது வெப்ப அழுத்தம்‌ காரணமாக அசெளகரியம்‌ ஏற்படலாம்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்சவெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரிசெல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌

Vignesh

Next Post

சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ...!

Mon Aug 7 , 2023
சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த விண்கலம் புவிவட்டப்பாதையை முடித்த சந்திரயான்-3 கடந்த ஒன்றாம் தேதி நிலவை நோக்கி பயணத்தை […]

You May Like