fbpx

மக்களே எல்லாம் உஷாரா இருங்க…! தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை…!

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் மஞ்சள் நிற பேருந்துகள்… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்...

Fri Aug 11 , 2023
தமிழகத்தில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கின்றன. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் பிங்க் நிற வண்ணம் பூசப்பட்டு இயங்கி வருகிறது. முன்னதாக சட்டப்பேரவையில், அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் […]

You May Like