fbpx

வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 05.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார்‌ வளைகுடா, லட்சத்தீவு, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், வடக்கு கர்நாடக கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 460 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலருக்கு கண் பார்வை பாதிப்பு.. 8 பேர் உயிரிழந்தனர்..!

Fri Aug 5 , 2022
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் இருக்கும் சப்ராவில் பனன்பூர் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் குடித்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த சாராயத்தை குடித்த பலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர், […]

You May Like