fbpx

’தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை ஓயாது’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்’..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 20 , 2023
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் […]

You May Like