உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடையே கொண்டாடப்படும் ஒரு நேசத்துக்குரிய பண்டிகை ரக்ஷா பந்தன். ஆழமான கலாச்சார மற்றும் உணர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வருடந்தோறும் ஆகஸ்ட் 19, 2024 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை அதிகப்படுத்த கொண்டாடப்படுகிறது. இது அவர்களுக்கு இடையிலான அன்பை பற்றியது. இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி என்று அழைக்கப்படும் சிறப்பு கயிறை கட்டுகிறார்கள். மேலும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த பண்டிகை சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்துகிறது. உடன் பிறந்தவர்கள் மட்டும் இல்லாமல் தன்னுடன் படிக்கும், வேலைபார்க்கும் நபர்களுக்கும் ராக்கி கட்டப்படுகிறது.
வரலாறு:
மகாபாரத கதைகளின்படி, ஒரு முறை கிருஷ்ணர் காத்தாடி விட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த நூல் அவரது விரலை கிழித்து காயமாகி விடுகிறது. கிருஷ்ணரின் விரலில் ரத்தம் வழிவதைக் கண்ட திரௌபதி வேதனை அடைந்தார். உடனடியாக, தன்னுடைய சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் விரலில் கட்டுப்போட்டு விடுகிறார். இதனால் நெகிழ்ந்த கிருஷ்ணர், திரௌபதியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டு, எப்போதும் பாதுகாப்பதாக வாக்களித்தார்.
திரௌபதியை தனது சகோதரியாக ஏற்ற கிருஷ்ணர் பாதுகாப்பாக இருப்பார் என்று பொருள். அதே போல பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடந்த பகடை விளையாட்டில் எல்லாவற்றையும் பாண்டவர்கள் கௌரவர்களிடம் பறிகொடுத்து விட்டு, இறுதியாக திரவுபதியை வைத்து விளையாடினர். அந்த ஆட்டத்திலும் தோற்ற பாண்டவர்களை அவமானப்படுத்துவதற்காக துச்சாதனன் திரௌபதியை சபையின் நடுவே நிறுத்தி, சேலையை துகிலுரிய துவங்கினான். எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் கூறிய வாக்கின்படி திரௌபதியை கிருஷ்ணன் காத்தார்.
கொண்டாட்டங்கள் ;
ரக்ஷா பந்தன் அன்று, பெண்கள் ஒரு தட்டில், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள் மற்றும் ராக்கி கயிறு வைத்து, தனது சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து, இனிப்புகள் ஊட்டி, அவனுடைய கையில் ராக்கி கயிறு கட்டி, பரிசும் ஆசியும் பெறுவார்கள். இதனால், திருமணமான பெண்கள், ரக்ஷா பந்தன் என்று தனது சகோதரன் இல்லத்துக்கு சென்று ராக்கி கட்டி கொண்டாடுவார்கள். வசதிக்கு ஏற்றவாறு, ராக்கி கயிறு, சாதாராண கயிறு முதல், தங்கம், வெள்ளி, மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட கயிறாகவும் கட்டலாம். அதே போல, சகோதரனும், தங்கள் வசதிக்கு ஏற்றவாறு, பரிசுகளாகவோ, ரொக்கப் பணமாகவோ சகோதரிக்கு வழங்குவார்கள்.
Read more ; சீனா-பிலிப்பைன்ஸ் இடையே மீண்டும் மோதல் அதிகரிப்பு!. தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம்!