fbpx

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு..!! மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் எனது அரசு விரும்புகிறது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் அவர், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொள்வதில் மாநில காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால், பாஜகவின் சதி வெற்றிபெறும் வகையில் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணாமுல் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Read More : முதல் மாநாடு..!! உறுதியான இடம்..!! அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் மனு..!!

English Summary

Chief Minister Mamata Banerjee has said that the law to hang the convicts of sexual assault within 7 days will be passed next week.

Chella

Next Post

பாலியல் புகாரால் பற்றி எரியும் கேரள சினிமா..!! - முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு செக்!! புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு..!!

Wed Aug 28 , 2024
A special helpline number and email address has been announced for victims of sexual harassment in the Malayalam film industry to file complaints.

You May Like