fbpx

காயத்துடன் ராஷ்மிகா மந்தனா.. சினிமாவில் இருந்து ஷார்ட் பிரேக்..!! என்னாச்சு..?

கன்னடத் திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.  அடுத்து அவரின் ‘ரெயின்போ’ போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. 

பான் இந்திய நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. தற்போது ஏஆர் முருகதாஸ், சல்மான் கானுடன் தற்போது இணைந்துள்ள சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்து வருவதால் இத்திரைப்படம் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அவரின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் சிறிது காலம் சினிமா சார்ந்த வேலைகளில் ஈடுபட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இத்திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது. மேலும், ராஷ்மிகா ‘தாமா’ என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Read more ; “ஒழுங்கா லவ் பண்ணு இல்லேன்னா கொன்னுடுவேன்” நடு ரோட்டில், இளம்பென்னிற்கு நேர்ந்த கொடூரம்!!

English Summary

Rashmika Mandana with hand injury.. Short break from cinema..!! What’s up..?

Next Post

"உனக்கு என்னோட புருஷன் கேக்குதா?" கொதிக்கும் எண்ணெயை, ஊற்றி பெண்மசெய்த கொடூரம்!!

Fri Jan 10 , 2025
woman poured boiling oil on a woman and killed

You May Like