fbpx

லூதியானா ஹோட்டலில் மட்டன் குழம்பில் எலி!

லூதியானா ஓட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் முழு எலி இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியு்ளளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், விவேக்குமார் என்பவர், கடந்த வாரம் குடும்பத்துடன் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மட்டன் போன்ற அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகமும் அவர் ஆர்டர் செய்த உணவு வகைகளை ஊழியர் மூலம் வழங்கியுள்ளது. அவர்கள் சாப்பிடும் வேளையில், மட்டன் குழம்பு பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அந்தக் குழம்பில் எலி இறந்து கிடந்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த குடும்பம், உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளது.

ஆனால், அதை ஏற்க மறுத்த ஹோட்டல் உரிமையாளர் அந்தக் குடும்பத்தையே மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் காணொளி எடுத்த விவேக்குமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம், சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Maha

Next Post

மனைவியைக் கொன்று மூளையைச் சாப்பிட்ட கணவர்

Sun Jul 9 , 2023
மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அல்வாரோ தன் மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கொலை செய்து உள்ளார். […]

You May Like