fbpx

” மக்களே.. பண வீக்கம் காரணமாக ரெப்போ விகிதம் 5.4 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு…!

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பணவீக்கம் மற்றும் மேலும் அதிகரிக்கவுள்ள பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. “தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளை சீர்குலைக்கும் மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்” என பணவியல் கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தெரிவித்தார்.

வளர்ச்சி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை – 2022-23-ல் 7.2% ஆகும். இந்தியப் பொருளாதாரம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக் கணிப்பில் எவ்வித மாற்றமும் இன்றி, நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும், முதல் காலாண்டில் 16.2 சதவீதமாகவும் உள்ளது என்று ஆளுநர் கூறினார். 2-ம் காலாண்டில் 6.2% 3-வது காலாண்டில் 4.1% மற்றும் 4-வது காலாண்டில் 4.0%. 2023-24-ம் ஆண்டுக்கான உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்.

Vignesh

Next Post

இவர்களுக்கு மட்டும் தான் பணியில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

Sat Aug 6 , 2022
நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு […]
முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..! அனைவரும் பாதுகாப்பாய் இருப்போம் என ட்விட்டரில் பதிவு..!

You May Like