fbpx

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட…..! 11 கிலோ தங்கம் கடலோர காவல் படை உதவியுடன் மீட்பு…..!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். மற்றொரு படைகள் கடத்திவரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பருவதம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒட்டுமொத்தமாக 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலமாக கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சென்ற 30 ஆம் தேதி பிற்பகல் மண்டபம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துக்காக சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த பைபர் படகு ஒன்றில் பதிவு எண் இல்லாமல் இருந்தது. ஆகவே அந்த படகை விரட்டி பிடித்தனர். படகிலிருந்த வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (35), அப்துல்ஹமீது (33) தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் 46 உள்ளிட்டோரை மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் 3 பேரும் இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததாகவும் அந்த பார்சலை மண்டபம் அருகே உள்ள மணலி டிவி கடலில் போட்டு விட்ட தாகவே கடலோர காவல் படையும் நீச்சல் பிரிவு வீரர்கள் கடலில் தங்கத்தை தேடி கிளம்பினர். அந்த பார்சலில் இருந்த 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோர காவல் படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் நேற்று மீட்டனர்.

இதற்கு நடுவே நேற்று முன்தினம் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதி வேதாளையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றொரு சந்தேகத்திற்குரிய படகிருந்து 21 கிலோ 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு பாடகிலிருந்த வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த சாதிக் அலி (32), முகமது அசார்(30) உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

ஒட்டுமொத்தமாக 5 பேரை கைது செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களின் விபரங்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 32 கிலோ 870 கிராம் தங்கத்தின் மதிப்பு 20.20 கோடி என்று கடலோர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

Next Post

சென்னை| அடையாற்றில் குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை….! காரணம் என்ன…..?

Fri Jun 2 , 2023
சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் இவருடைய மகன் ராமச்சந்திரன்(36) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அவருடைய குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இத்தகைய நிலையில், காணாமல் போன ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like