சென்னையில் இன்று கனமழையும் அக்டோபர் 15, 16 ஆம் தேதிகளில் மிக கன மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 66% அதிகம் பெய்துள்ளது. சென்னையில் மிக கனமழை அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வரும் 16 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் பதற்றமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த காலத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. மீட்புப் பணிகளில் ஈடுபட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுப்பாளையத்தில் 3 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Read More : BREAKING | டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! இந்த மாவட்டங்களிலும் சம்பவம் இருக்கு..!!