fbpx

கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சற்று கால தாமதமாக ஜூன் 8ஆம் தேதி துவங்கியது. இருப்பினும் ஜூன் மாதம் முழுவதுமே கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், ஆலப்புழா, காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம்திட்டாவில் 3 வீடுகளும் சேதமடைந்துள்ளன. ஆலப்புழா மற்றும் இடுக்கியில் 3 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஆலப்புழா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 24 மணி நேரமும் தாலுகா கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என்றும் மலைப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கும்படியும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். பலத்த காற்று வீசிவருவதால் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

ஹார்லி-டேவிட்சன் vs டிரையம்ப்... போட்டியில் எது ஜெய்க்கும்?

Tue Jul 4 , 2023
இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. யுகே-இல் […]

You May Like