தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பாக அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் 8-ம் தேதி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட உள் நோயாளிகள் வளாகத்தின் மூன்றாவது தளத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த பிரிவில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை, அந்த வளாகத்தில் எதிர் திசையில் அமைந்துள்ள அறையில் ஆறு நோயாளிகள் இருந்தனர். விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் எந்த நோயாளிக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஒரு நோயாளிக்கும் மட்டும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்கு மேற்கூரை பூச்சில் ஏற்பட்ட விரிசலே காரணம். ஆனால் இது சம்பந்தமாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் வெளிவந்துள்ள படங்கள் மற்றும் காணொலி காட்சிகள் தவறாக வழிநடத்தும் விதமாக அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரியின் தலைவர் விரைந்து செயல்பட்டு அந்த வளாகத்தில் உள்ள நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வேறு இடத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.