fbpx

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிரேடு ‘பி’ தேர்வு முடிவுகள் வெளியீடு…!

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகளின் (கிரேடு ‘பி’) துறைசார் எழுத்துப் போட்டித் தேர்வின் முடிவுகள், 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சேவைப் பதிவேடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்திய செயலகப்பணி, ரயில்வே வாரிய செயலகப்பணி, நுண்ணறிவுப் பிரிவு, ஆயுதப்படைகள் தலைமையக குடிமைப்பணி ஆகியவற்றில் இந்த தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளில் உள்ள 465 காலிப் பணியிடங்களில் 455 தேர்வர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 43 பேர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 43 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்த 369 பேர் அடங்குவர். இவர்கள் மத்திய செயலகப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே வாரிய செயலகப்பணியில் காலியாக உள்ள 16 இடங்களுக்கும் பொதுப் பிரிவில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நுண்ணறிவுப் பிரிவில் காலியாக உள்ள 61 இடங்களில் 58 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்தோர் 44 பேர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 பேரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகள் தலைமையக குடிமைப்பணியில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கும், தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 5 பேரும், பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

English Summary

Release of Grade ‘B’ Examination Results conducted by Central Staff Selection Commission

Vignesh

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024!. சுதந்திரத்திற்குப் பின்!. இந்தியாவிற்கான முதல் பதக்கம்!. ஓர் அலசல்!

Wed Jul 3 , 2024
Paris Olympics 2024: Who won India's first medal at the Games post-Independence?

You May Like