தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் சாலையில் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வெளியே சென்று விட்டு எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் வீட்டிற்கு வருவது என்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. என்ன தான் கவனமாக சென்றாலும், எதிரே வருபவர்களால் சில சமயங்களில் விபத்துக்கள் நிகழ்கின்றன.
ஆனால், சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் நிகழும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கவலை ஏற்படுகிறது. இவ்வாறு அடிக்கடி விபத்துகளில் சிக்குபவர்கள் இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம். அதற்கு வெளியே வண்டியில் செல்வதற்கு முன்பு எந்தவித மனக்குழப்பமும் இல்லாமல் செல்ல வேண்டும். வெளியே செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்து மனதை அமைதிப்படுத்தி விட்டு செல்ல வேண்டும்.
மேலும், ஒரு மஞ்சள் துணியில் முழு கொட்டை பாக்கு, கருப்பு உப்பு, படிகார கல், கருப்பு எள் போன்றவற்றை எடுத்து நன்றாக முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை வெளியே செல்லும்போது ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கூறி வாகனத்தில் மறைவாக பிறர் கண்களில் படாதபடி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொள்வதால் நமக்கு வரும் ஆபத்து நம்மை விட்டு நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாடு முழுவதும் “முதல்வர் மருந்தகம்”..!! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!