பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பிரபல இருதய நோய் நிபுணர் மருத்துவர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. அவருக்கு தற்போது 86 வயது ஆகிறது. வணிக உலகில் வெற்றி மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்களில் முக்கியமானவர்.
இவர் மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக 1991-2012 மற்றும் 2016-17 பதவி வகித்தார். டிசம்பர் 2012 இல் டாடா குழுமத்தின் தலைவராக டாடா ஓய்வு பெற்றார். அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக சிறிதுகாலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது ரத்தன் டாடா ஜனவரி 2017 இல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read more ; Tomato Price : ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை.. விலையை கேட்டு அதிரும் பொதுமக்கள்..!!