fbpx

அதிர்ச்சி கிராம சபை கூட்டங்களில்….! ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்…..!

கிராமசபை கூட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும் விதத்தில், கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மேற்கொள்ளும் அனைத்து நிலைப்பாடுகளையும் ஆளுநர் புறக்கணித்து வருவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று, ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Next Post

சுதந்திர தின ஸ்பெஷல்..!! பிளிப்கார்ட், அமேசானில் சிறப்பு தள்ளுபடி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Aug 15 , 2023
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேல் நடந்து வரும் நிலையில், Oppo, Vivo, Redmi, iPhone போன்ற பிராண்டட் போன்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளை வரை […]

You May Like