காரீப் சந்தைப் பருவம் 2022-23க்கு காரீப் பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்த மாநில உணவுச் செயலாளர்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் திரு சுதன்ஷு பாண்டே தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, திரிபுரா உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதன்மைச் செயலாளர்/ உணவுத்துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் மற்றும் இதர அதிகாரிகள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.