கடந்த சில தினங்களாக மெல்ல விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று மேலும் விலை குறைந்து விற்பனையாகிறது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் நேற்று ஒரு கிராம் 5,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து கிராமுக்கு 5,720 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் 24 கேரட் தங்கம், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 49,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.