மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. மேலும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இந்த மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..
இதனிடையே www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.. மேலும் இத்திட்டத்திற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டன.. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.. இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவோர் இந்த திட்டத்தில் பயனடையலாம்.. இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்..
இதனிடையே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்குக் மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான நிதியை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.. இதற்காக கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன் கூட்டுறவுத்துறை இணை அதிகாரிகள் இன்று மதியம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர்.. இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..