மகளிர் உரிமை தொகை மற்றும் கல்விக்கடன் கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. என்ன அறிவிப்புகள் என்பதை பார்க்கலாம்.
மகளிர் உரிமை தொகை:
ராமநாதபுரம் மாவட்டம் குஞ்சார் வலசையில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழ்நாட்டில் சிறந்த கபடி வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது.
கல்வி கடன் ரத்து:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும், மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலவில்லை.
இதன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது.