மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை ராயபுரம், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.. இத்திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்படும்..
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் “ கல்வியில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியவே புதுமைப்பெண் திட்டம்.. மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவதை இலவசமாக கருதவில்லை.. அரசின் கடமையாக நினைக்கிறது.. இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் திமுக ஆடியின் அடையாளங்கள்.. பள்ளியுடன் நிற்கும் பெண்கள், 1000 ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்கு செல்கின்றனர்.. இதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.
பாலின சமத்துவம் ஏற்படும்.. குழந்தை திருமணம் குறையும்.. பெண்கள் அதிகாரம் பெறுவார்கள்.. பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க முடியும்.. அனைவருக்குமான வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதே அரசின் .. அதை மனதில் வைத்தே புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது..
கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித்துறை பல மகத்தான சாதனைகளை செய்துள்ளது.. திமுக அரசு பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி வருகிறது.. இந்த புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்கும் போது ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு நான் உரையாற்றி வருகிறேன்.. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் தந்தையின் இடத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளேன்.. கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் மாணவிகளுக்கு தந்தையின் பேரன்புடன் என்றும் துணை நிற்பேன் ” என்று தெரிவித்தார்..