fbpx

மாணவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 பணம்.. இதுவரை எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்..?

மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.. மேலும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இந்த மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..

இதனிடையே www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.. மேலும் இத்திட்டத்திற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டன.. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.. இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவோர் இந்த திட்டத்தில் பயனடையலாம்.. இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்..

இதனிடையே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்குக் மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்திற்கு இதுவரை இந்த திட்டத்திற்கு சுமார் 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் நாளை அதிகமான மாணவிகள் விண்ணப்பிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.. கல்லூரிகள் தொடங்கிய உடன், முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது..

Maha

Next Post

மப்டியில் வந்திருக்கேன் செயினையாவது கழட்டி கொடு... இல்லன்னா உள்ள தள்ளிடுவேன்...இளைஞரை மிரட்டிய நபர்...!

Sat Jul 9 , 2022
சென்னை, செங்குன்றம் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள காமாட்சியம்மன் நகரில் வசித்து வருபவர் வேதநாதன் (23). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்தில் காத்திருந்தபொழுது அவரிடம் வந்து ஒருவர் தன்னை ஆவடி சப் இன்ஸ்பெக்டர் என்றும், மப்டி யில் இருப்பதாகவும் அறிமுகம் செய்துள்ளார். அதன் பிறகு உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி வேதநாதனை தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கே, நீ ஒரு பெண்ணை கடத்திச் செல்வதற்காக […]

You May Like