fbpx

தெருநாய்களை பிடித்தால் ரூ.500 பரிசு… நாய்களை பிடிக்க முடியாமல் திணறும் கேரளா அறிவிப்பு…

கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் உயிர் பயத்தில் மக்கள் நடமாடவேண்டியுள்ளது. இந்நிலையில் தெருநாய்களை பிடிக்கத் திணறும் கேரள அரசு தெருநாய்களை பிடித்து தருவோருக்கு 500 ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கின்றது. தெருநாய் கடித்து உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் உயிரிழப்பு ஏற்படுவதால் மக்கள் நடமான அஞ்சுகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை , லைசன்ஸ் உள்ள துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பள்ளி மாணவர்களை அழைத்துக் செல்லும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் தொடர்ந்து யாரையும் விடாமல் தாக்கி வருவதால் அந்த நபர் நாயை சுடவும் தயங்கமாட்டேன் எனக் கூறிக் கொண்டு துப்பாக்கியுடன் பள்ளிக்கு செல்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறியது இந்த காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல 12 வயது சிறுமி ஒருவர் நாய் கடித்ததால் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல பல்வேறு உயிரிழப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் நடந்த சம்பவங்களில் 21 பேர் இதுவரை பாலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஒருவர் சங்கிலியால் தன்னைத்தானே கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெரு நாயை பிடித்துத் தருவோருக்கு ரூ.500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. நாய்களை கொல்வது பிரச்சனைக்கு தீர்வாகாது என அரசு தெரிவித்துள்ளது. எனவே அறிவியல்பூர்வமான தீர்வு வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Next Post

கடல் மட்டம் உயர்வால் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் !!.. அதிர்ச்சி தகவல்... காலநிலை மாற்ற திட்ட வரை அறிக்கை..!

Sat Sep 17 , 2022
கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 100 வருடங்களில் சென்னையில் இருக்கும் மின் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. 2050-ஆம் […]

You May Like