ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது. காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது. நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.