ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர்புதின் சில நாட்களாகவே வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றார். ரஷ்ய உக்ரைன் போர் அதிகரித்து வரும் நிலையில் அவர் ஏதோ உடல் நல பிரச்சனையில் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்தது. தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றார். இது தொடர்பாகவும் ஏற்கனவே வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் அவரது மெயிலில் இருந்த ஆவணம் ஒன்று கசிந்துள்ளது. அந்த ஆவணத்தில் அவரது உடல் நலம் குறித்த முக்கிய விவரங்கள் அடங்கி இருந்தது. இதில் ரஷ்ய அதிபருக்கு தீவிர நோய் இருப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகின்றது. அவருக்கு ’பார்கின் சன்’ என்ற நோய் இருப்பதாக தெரிகின்றது. நரம்புகளை பாதிக்கும் இந்நோய் தற்போது அவருக்கு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மற்றொரு நோய் கணையத்தை பாதித்துள்ளது. கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எல்லாம் அவர் மறைத்திருக்கின்றார் என பேசப்பட்டு வருகின்றது. மேலும் அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை பற்றியும் பரபரப்பாக பேசப்படுகின்றது. அவரது உடல் நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதிகமான ஸ்டெராய்டு அவருக்கு போடப்படுகின்றது. வலி நிவாரணி ஊசிகள் போடப்படுகின்றது. புற்று நோய் மேலும் பரவாமல்இருக்க ஊசிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும் அந்த ஆவணத்தில் , ப்ரோ ஸ்டேட் எனப்படும் புற்றுநோய் என உள்ளது. இந்த வகையில் சிலவற்றிற்கு தீர்வுகள் உள்ளன. சில வகைக்குசிகிச்சை முறையே கிடையாது என கூறப்படுகின்றது. சில புற்று நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இது வலியை மட்டுமின்றி… முகத்தில் வீக்கத்தை உண்டு செய்யும் பக்கவிளைவை ஏற்படுத்துகின்றது.