fbpx

உரிய காலத்தில் சம்பளம் கிடைக்கவில்லை..!! கூலி வேலைக்கு செல்ல விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய அரசுப் பேருந்து ஓட்டுநர்..!!

உரிய காலத்தில் சம்பளம் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக விடுமுறை கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்க வேண்டுமென அம்மாநில உயர்நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டும், நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி டிப்போவில் பணிபுரியும் டிரைவர் அஜு என்பவர், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக முறையான காலத்தில் சம்பளம் கிடைக்கவில்லை. சில மாதங்களில் இரண்டு மாதம் இடைவெளி ஏற்படுகிறது. இதனால், குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை.

சாப்பாட்டுக்கே திண்டாட்டமாக உள்ளது. கூலி வேலைக்கு சென்றால் தினமும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதற்காக, எனக்கு வாரம் 3 நாட்கள் விடுப்பு தர வேண்டும்” என்று கடிதத்தில் கூறியிருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கேரள அரசின் மோசமான நடவடிக்கைகள் தான் போக்குவரத்துக் கழகத்தின் இந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Chella

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை இப்படியும் பதிவு செய்யலாம்…..! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!

Sat Jul 15 , 2023
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தடவைகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு நியாய விலை கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகங்களில் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தைச் சார்ந்த 6000 தன்னார்வலர்கள் மற்றும் சுய […]

You May Like