மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், தரவு உள்ளிடும் பணியாளர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), தரவு உள்ளிடும் பணியாளர் கிரேடு ‘ஏ’ நிலை என 3,712 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிட விவரங்கள் :
மொத்த காலியிடங்கள் : 3712
தேர்வு : ஒருங்கிணைந்த மேல்நிலைத் (10+2) தேர்வு, 2024
பதவி : Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
ஊதியம்: மாதம் ரூ.19,900 – ரூ.63,200 வரை வழங்கப்படும்
பதவி: Data Entry Operator (DEO)
சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100 மற்றும் நிலை -5 (ரூ.29,200 – ரூ.92,300 வரை)
பதவி: Data Entry Operator, Grade ‘A’ நிலை -4
சம்பளம்: மாதம் ரூ. 25,500 – ரூ.81,100
வயது: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.5.2024
Read More : Oily Foods | எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டீர்களா..? இனி மறக்காம இதை பண்ணுங்க..!!