fbpx

செம சான்ஸ்‌..! 12,523 காலி பணியிடங்கள்…! தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்..‌.!

மத்திய அரசின் MTS பணிக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி நடத்தப்படும் என சேலம் மாவட்டம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 28 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வினை தமிழ்‌ மொழியிலும்‌ எழுத மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அனுமதித்துள்ளது.

Vignesh

Next Post

வாணி ஜெயராம் வீட்டில் என்ன நடந்தது..? பணிப்பெண் கூறிய பரபரப்பு தகவல்..

Sun Feb 5 , 2023
1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது […]

You May Like