fbpx

பெற்றோர்களே கவனம்!!! பள்ளியில் இருந்து, வீட்டிற்க்கு தனியாக சென்ற 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் இந்திரா நகரில் ஏழு வயது சிறுமி ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால், சிறுமி தனது பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வழக்கம் போல் சிறுமி பள்ளி முடிந்து, பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற பாதையில் நின்ற இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறுமியும் அந்த வாலிபருடன் பேசியதை அடுத்து, அவர் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவி தன்னை விடுமாறு கதறி அழுதுள்ளார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால், சிறுமியை யாரும் காப்பாற்ற வரவில்லை. இதையடுத்து, ரத்தக் காயங்களுடன் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமி மயக்கம் தெளிந்த பிறகு, அழுது கொண்டே தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறுமியின் அலங்கோல நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலேஷ் மைன்கர் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் சோஹைல் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read more: கொடூரத்தின் உச்சம்!!! சிறுமியின் சடலத்தையும் விட்டுவைக்காமல், வாலிபர்கள் செய்த காரியம்..

English Summary

school girl was sexually abused

Next Post

"நிர்வாணமா ரோட்டுல நின்னேன்" பிரபல நடிகர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..

Sun Dec 15 , 2024
famous actor shares his experience about his failure

You May Like