fbpx

பள்ளி மாணவியின் அம்மா ஃபோனுக்கு வரிசையாக வந்த ஆபாச வீடியோ..!! ஆசிரியர் செய்ற வேலையா இது..? கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர், பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கி, அந்த செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் ஒருவர் அந்த பள்ளி மாணவியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது, ஆசிரியர் தங்கப்பாண்டியன் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி ஆசிரியரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!

English Summary

A teacher who sexually harassed a schoolgirl by sending obscene pictures was arrested and jailed under the POCSO Act.

Chella

Next Post

Budget 2024 | சொத்து விற்பனைக்கான குறியீட்டு பலன்களை நீக்குவது ரியல் எஸ்டேட்டை எவ்வாறு பாதிக்கும்? - நிபுணர்கள் கருத்து

Wed Jul 24 , 2024
Budget 2024: How will removal of indexation benefits for property sales impact real estate?

You May Like