நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.